பட்டத் திருவிழாவை தடுக்க நீதிமன்றமா? .சிவாஜிலிங்கம் அதிரடி

Reha
4 years ago
பட்டத் திருவிழாவை தடுக்க நீதிமன்றமா? .சிவாஜிலிங்கம் அதிரடி

வருடாந்த தைப்பொங்கல் திருநாளில் நடைபெறவுள்ள வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொரோனா வைரஸ் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.

இதையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகர சபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இதேவேளை, அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4