பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வந்த சரத்குமார்- வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

Nila
4 years ago
பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வந்த சரத்குமார்- வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலக விரும்புபவர்கள் வெளியேறலாம் என்று அறிவிப்பார்

கடந்த சீசனில் கேப்ரில்லாவும், அதற்கு முந்தைய சீசனில் கவினும் பண பெட்டியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த சீசனுக்கான பணப்பெட்டி இன்று உள்ளே வரும் காட்சி இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

பிரபல நடிகர் சரத்குமார் இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். மூன்று லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்பவர்கள் பணத்துடன் வெளியேறலாம் என்ற அறிவிப்பை சரத்குமார் வெளியிடுகிறார்

தற்போது பிக்பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த ஏழு பேர்களில் யார் இந்த மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4