சிங்கப்பூரில் ஓமக்ரான் பரவல் ஏற்படக்கூடும் -நாடு தயாராக இருக்கவேண்டும்: சுகாதார அமைச்சர் ஓங் எச்சரிக்கை

Prasu
2 years ago
சிங்கப்பூரில் ஓமக்ரான் பரவல் ஏற்படக்கூடும் -நாடு தயாராக இருக்கவேண்டும்: சுகாதார அமைச்சர் ஓங் எச்சரிக்கை

சிங்கப்பூரில் ஓமக்ரான் கிருமிப்பரவல் எந்த நேரத்திலும் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் நாடு அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரில் சுமார் 17 விழுக்காட்டினர், ஓமக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திரு ஓங் தெரிவித்துள்ளார்.

தற்போது கிருமித்தொற்று நிலவரம் தொடர்ந்து நிலையாக இருப்பதைத் திரு ஓங் சுட்டினார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,200ஆகப் பதிவானது.

நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அந்த எண்ணிக்கை 26,000-ஐக் கடந்ததை அவர் சுட்டினார்.

கடந்த 3 மாதங்களில் தீவிரச் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஆகக் குறைவாக 20ஆகப் பதிவாகியிருப்பதைத் திரு. ஓங் குறிப்பிட்டார்.

டெல்ட்டா வகை நோய்ப்பரவல் தணிந்திருப்பதை அது காட்டுவதாக அவர் சொன்னார். 

மேலும் பல உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யுங்கள்.