சிங்கப்பூரில் காணாமற்போன 11 வயதுச் சிறுமி மீட்பு
Prasu
3 years ago

சிங்கப்பூரில் 3 நாள்களாகக் காணமல் போயிருந்த 11 வயதுச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நூர் நஃபஸ்யா நூர் முகமது (Nur Naffasyah Noor Mohamad ) என்னும் அந்த சிறுமி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று பொங்கோல் செட்டில்மெண்ட் என்ற உணவு, பானக் கடை வளாகத்துக்கு அருகே காணப்பட்டார்.
அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று புகார் வந்ததைத் தொடர்ந்து, சிறுமியைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
சிறுமி, எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுபற்றிய விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை.
மேலும் பல உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யுங்கள்.



