இன்றைய வேத வசனம் 05.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 05.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

தண்ணீர் நிறைந்த ஆற்றின் மேலிருந்த ஒரு சிறு பாலத்தின் மேல் தகப்பனும் மகனுமாக நடந்து சென்றனர். மகன் கீழே புரண்டு ஓடும் தண்ணீரைக் கண்டான். நடுக்கம் உண்டாயிற்று.

"அப்பா பயமாயிருக்கிறது; கீழே ஆற்றின் வேகத்தை பார்த்தீர்களா??"
"உன் கையை என்னிடம் கொடு" என்ற தகப்பனாரின் கைகளை பிடித்தவுடன் அவனுடைய பயம் எங்கு பறந்து போனதோ தெரியாது.

தகப்பனாரின் கரத்தில் ஒரு வல்லமை, ஒரு நம்பிக்கை, ஒரு அடைக்கலம், ஒரு பாதுகாப்பு இருக்கிறதை மகன் உணர்ந்தான்.

இரவு நேரத்தில் மீண்டும் அவர்கள் அதே பாதையின் வழியாகத் திரும்பினார்கள். 
"அப்பா காலையில் நான் பயப்படுவதை விட இப்போது நான் அதிகமாய் பயப்படுகிறேன்" என்றான் மகன்.

தகப்பனார் தன் மகனை தூக்கி, தன் தோளில் சாய்த்துக் கொண்டார், இப்பொழுது பூரண சமாதானம். தகப்பனாருடைய தோள்களில் இனிமையாய் தூங்கிவிட்டான்.

பயங்களில் கொடூரமானது மரண பயம் தான். ஆனாலும் தேவனுடைய பிள்ளைகள் பயப்படுவதில்லை. கிறிஸ்துவின் மார்பில் இளைப்பாறி, அப்படியே தூங்கி போய் விடுகிறார்கள்.

நீங்கள் உங்களது கண்களை நித்திய ராஜ்யத்திற்குள் திறக்கும் போது, எவ்வளவு மகிழ்ச்சியான மாறுதலாயிருக்கும்.கர்த்தர் மரணத்தை உங்களுக்கு ஜெயமாக மாற்றிக் கொடுத்தார்.

தேவ மனிதர் பிஷப். கிளாஸ்பிரென்னர்  தன் மரணத் தருவாயில் சொல்கிறார்:-
:எல்லாம் சரிதான்; என் வீடு மேலே இருக்கிறது; அதற்கு எனக்குரிய உரிமையும் தெளிவாய் இருக்கிறது" என்று. அல்லேலுயா!

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1 கொரிந்தியர் 15:55)
ஏசாயா 41:13

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.