வைத்தியர்கள் விவகாரம்: சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பிரதமர் ஆலோசனை

Mayoorikka
2 years ago
வைத்தியர்கள் விவகாரம்: சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பிரதமர் ஆலோசனை

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபை தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் தீர்வு காணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுவரை காணப்பட்ட முறையை மாற்றுவதற்கு முயற்சிப்பதன் ஊடாக நெருக்கடிகள் ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

இடமாற்ற சபை பிரச்சினையில் தான் தலையிடப் போவதில்லை என்றும் அவ்வாறு தலையிட்டால் அரசியல் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டு எழும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

வைத்திய நிர்வாகத்தை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட என இரு பிரிவுகளாக பிரித்து செயற்படுத்தாது ஒரே அடிப்படையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்