சுவிசில் இருந்து இலங்கைக்கு உண்டியல் ஊடாக பணம் அனுப்ப புதிய நடைமுறைகள்.

Reha
2 years ago
சுவிசில் இருந்து இலங்கைக்கு உண்டியல் ஊடாக பணம் அனுப்ப புதிய நடைமுறைகள்.

வெளி நாடுகளில் வாழும் பல தமிழர்கள் தமது உறவினர்களுக்கு அல்லது நலிவுற்றவர்களுக்காக உதவுவதற்க்கு மற்றும் தமக்கு ஒரு சொத்து வாங்குவதற்காக, இலங்கைக்கு பெரும் தொகையான பணத்தை வங்கி ஊடாகவும், தனியார் பணப்பரிமாற்று நிறுவனங்ககளின் ஊடாகவும் பணம் அனுப்புவது அனைவரும் தெரிந்த விடயம்.

அதனால் அரசாங்கத்துக்கும் ஒரு அன்னிய செலாவணி நாட்டுக்கு வரும் ஆதாயத்தைக்கொடுக்கிறது. 
ஆனால் அப்படி அனுப்பும் பணங்களை சிலர் சட்டத்துக்கு உட்பட்டும், சட்டத்துக்கு அப்பாற்பட்டும் அனுப்புவதும். பேசப்படுகின்ற ஒரு செய்தியாகும்.

இதை தாண்டி தற்போது இலங்கை அரசு கொண்டுவந்துகொண்டிருக்கும் புதிய சட்டத்தின் ஊடாக பணத்தை அனுப்புகின்றவர்களுக்கும், அதனை அனுப்பிக் கொடுப்பவர்களுக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது இவ்வளவு நாழும் கண்டும் காணாது இருந்த இலங்கையில், தற்கால வெளிநாட்டு  நாணையத் தாழ்வு நிலையால் பல வெளிநாட்டு பணம் அனுப்பும் மற்றும் பெறும் சட்டத்தை இறுக்கி உள்ளது. இதனால் இலங்கைக்கு அன்னிய செலாவணி செல்வதில் தாழ்வு நிலை காணப்படுகிறது.

இதனால் பல பணம் அனுப்பும் மக்களும், வங்கியைவிட அதிக பெறுமதிக்கு பணம் அனுப்பிக்கொடுக்கும் சட்டரீதியானவர்களும், சட்டத்துக்குப் புறம்பாக அனுப்புகின்றவர்களுக்கும் வியாபார ரீதியாக பெரிய வருமானக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதிலே சட்டத்துக்கு புறம்பாக பணம் அனுப்புகின்றவர்களும்  அனுப்பிக் கொடுப்பவர்களும் மிக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வங்கியூடாக பணம் அனுப்புகின்றவர்கள் இன்றைய பெறுமதி. 220 ரூபாவாக வங்கிகள் கூறுகின்றன. ஆனால் பதிவோடு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் முகவர்களின் இன்றைய பெறுமதி. 163 ரூபாவாகவும், சட்டத்துக்கு புறம்பாக பணம் அனுப்பிக்கொடுப்பவர்கள் கொடுக்கும் பெறுமதி 170 ரூபா எனவும் சில இரகசிய தகவல்கள் கூறுகின்றன.

இந்த நடை முறையால் பணம் அனுப்புகின்றவர்களும் நாட்டில் பெறுகிறவர்களும், அனுப்பி வைப்பவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார்கள். அதிக பணத்தை இலங்கைக்கு அனுப்பும் ஒருவர் அப்பணம் எங்கிருந்து வந்தது என இங்கே அனுப்பும் அலுவலகத்துக்கோ வங்கிக்கோ சரியாக கூறவேண்டும்.

அத்தோடு இலங்கையில் பணத்தை பெறுகின்றவரும் எதற்காக அப்பணம் உபயோகிக்கப்படுகிறது எனவும் சரியான காரணம் காட்டவேண்டும்.  அதை நிரூபிக்க முடியாது போனால் அப்பணம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் இலங்கை உட்பட அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தெரியவந்திருக்கிறது. இலங்கை நாட்டில் 1 லட்சத்துக்கு அதிகமாக பணம் அனுப்புகின்றவர்களுக்கு அதிக பட்சம் பிரச்சனை எற்படுவதாக கூறப்படுகிறது,

எனவே இலங்கைக்கு பணம் அனுப்பும் ஒவ்வொருவரும் அவதானமாக, தகுந்த ஆதாரத்துடன் உங்கள் பணத்தை அனுப்புமாறு இலங்கை அரசு உட்பட எமது ஊடகமும் கேட்டுக்கொள்கிறது. இப்படியான மக்களுக்கு பிரயோசனமான செய்திகளை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி பிரயோசனமடையுங்கள்.

இப்படி செய்திகள் உங்களிடம் இருந்தாலும் எமக்கு அனுப்புங்கள். அதனை மக்கள் நன்மைக்கும், நாட்டின் நன்மைக்கும், உலக நன்மைக்குமாக நாம் எமது அனைத்து ஊடகங்களிலும் பிரசுரிக்கிறோம்.

மேலும் இதுபோன்ற செய்திகளை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்