28 நாட்கள் கோமாவில் இருந்து வயாக்ரா மருந்தால் குணமடைந்த செவிலியர்

Prasu
2 years ago
28 நாட்கள் கோமாவில் இருந்து வயாக்ரா மருந்தால் குணமடைந்த செவிலியர்

இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர்  மோனிகா அல்மேடா (37) . 2  கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்.  அவருக்கு  கடந்த அக்டோபர் 19 அன்று  கொரோனா பரிசோதனை நடத்தபட்டது.  அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது இதை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 9 ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மோனிகா  நான்கு நாட்களில் சுவை மற்றும் வாசனையை இழந்தார்; அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் லிங்கன் கவுண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 28 நாட்களுக்கும் மேலாக கோமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரு சோதனை முயற்சியாக டிசம்பர் 14 அன்று மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவு வயாக்ரா  மருந்து கொடுத்து உள்ளனர். அத்ன பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்ரம் ஏற்பட தொடங்கி உள்ளது

செவிலியர் சுயநினைவு திரும்பிய பிறகு, லிங்கன் கவுண்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கோமாவில் வைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவருக்கு  வயாக்ரா மருந்து வழங்கப்பட்டதை வெளிப்படுத்தி உள்ளனர்.

மோனிகா இறுதியாக கிறிஸ்துமஸ் அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குடும்பத்துடன் அவர் விடுமுறையை கழிக்க முடிந்தது. இருப்பினும், அவர் முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செவிலியர் மோனிகா கூறியதாவது:-

நிச்சயமாக வயாகராதான் என்னைக் காப்பாற்றியது. 48 மணி நேரத்திற்குள் அது என் காற்று அலைகளைத் திறந்தது என் நுரையீரல் செயல்பட ஆரம்பித்தது. மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்றால் .  அது உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. எனக்கு ஆஸ்துமா உள்ளது, என் காற்றுப் பைகளுக்கு கொஞ்சம் உதவி தேவை.

நான் குணமனவுடன் மருத்துவ ஆலோசகர் ஒருவர் என்னிடம் உங்களை காப்பாற்றியது  வயாகரா தான்  என்று கூறினார். நான் சிரித்தேன், அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் 'இல்லை, உண்மையில், நீங்கள் அதிக அளவு வயாகரா சாப்பிட்டுள்ளீர்கள்' என்று கூறினார்.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இப்போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க  வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்