மிகநுட்பமான முறையில் 4 ஏக்கரில் கஞ்சா தோட்டம்! படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது எப்படி?

#SriLanka
Prathees
2 years ago
மிகநுட்பமான முறையில் 4 ஏக்கரில் கஞ்சா தோட்டம்! படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது எப்படி?

குமண பாதுகாப்புக்காட்டில் இரகசியமாகவும்  மிகநுட்பமான முறையிலும்  பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சியம்பலாண்டுவஇ லாகுகலஇ பொத்துவில் மற்றும் சாஸ்திரவெளி ஆகிய இடங்களைத் தளமாகக் கொண்ட விசேட அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது சுமார் 04 ஏக்கர் நிலப்பரப்பில் வளமான கஞ்சா வயல் காணப்பட்டதுடன் காடுகளுக்கு நடுவே கணிக்க முடியாத வகையில் கண்ணுக்குத் தெரியாத வகையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழு நாட்களாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் கு தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் வரலாற்றில் முதல் முறையாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவையடுத்துஇ கஞ்சாவின் முழுத் தொகையும் மருந்து உற்பத்திக்காக நாவின்ன இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்