மோடிக்கு கடிதம்: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் கையெழுது

Mayoorikka
2 years ago
மோடிக்கு கடிதம்: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் கையெழுது

தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றிணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கான ஆவணத்தில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான டெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களுக்காக அனுப்பட்ட போதிலும் அதில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ்சும் மலையக கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் குறித்த இரண்டு தரப்பினரது கையொப்பங்கள் இன்றி, தமிழ் தேசிய கட்சிகள் மாத்திரம் கையெழுத்திட்ட ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் இரா. சம்பந்தன், சி.வி. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமசந்திரன், ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். மாவை சேனாதிராஜா விரைவில் கையொப்பாமிடுவார் என கூறப்படுகிறது.

அத்துடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ் கட்சிகள் இந்திய துாதுவரை சந்தித்து பிரதமர் மோடிக்கு இந்த கடிதத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்