பிரபல பல்கலைக்கழகமொன்றில் உண்பதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ்வதற்கும் ‘முதுகலைப் பட்டம்‘

Keerthi
2 years ago
பிரபல பல்கலைக்கழகமொன்றில் உண்பதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ்வதற்கும் ‘முதுகலைப் பட்டம்‘

பிரபல பல்கலைக்கழகமொன்றில்  உண்பதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ்வதற்குமான ஒரு புதிய  முதுகலை பட்டப்படிப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சின் மிகவும் புகழ்பெற்ற அரசியல், அறிவியல் பல்கலைக்கழகமான சயின்சஸ் போ லில்லில்லேயே  (Sciences Po Lille) இப் பட்டப்படிப்பானது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம் முதுகலை பட்டப்படிப்பானது  BMW என, அதாவது boire manger vivre என அழைக்கப்படுவதாகவும் ,இதில் உணவு, பானங்கள் மற்றும் 'வாழ்க்கை' ஆகியவற்றை குறிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படிப்பு gastro-diplomacy யை சார்ந்து காணப்படுவதாகவும், இதில் உணவு குறித்த தொழில்நுட்ப்பம், சமயலறையில் பாலின பாகுபாடு போன்றவை குறித்து கற்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விரிவுரையாளர் Benôit Lengaigne கூறுகையில் இந்த புதிய படிப்பை மாணவர்களுக்கு எளிதில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும். , இந்த பட்டப்படிப்பு அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைகிறது”என்றார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்