பிரான்சை உலுக்கும் கொரோனா - 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Prasu
2 years ago
பிரான்சை உலுக்கும் கொரோனா - 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது.

நேற்று முன்தினம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அன்று ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக 2 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 204 பேர் இறந்துள்ளனர்.

இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.11 கோடியைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுதொடர்பாக பாரீஸ் நகரில் அரசு செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் பேசுகையில், பிரான்சில் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் முடியவில்லை. 2 வாரங்களில் பரவல் 3 மடங்கு ஆகி உள்ளது. 1 லட்சம் பேருக்கு 1,800 பேர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்தான். இந்த நிலை அடுத்த சில வாரங்களில் மேலும் மோசமாகும். தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேருகின்றனர் என குறிப்பிட்டார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்