இலங்கையில் கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை எப்போது கிடைக்கும்?

#SriLanka #Covid Vaccine
Nila
2 years ago
இலங்கையில் கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை எப்போது கிடைக்கும்?

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் இலத்திரனியல் அடையாளஅட்டை ஒன்றை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கண்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விபரங்களை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று (APP) உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அதனூடாக, இலத்திரனியல் அடையாளஅட்டையொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த இலத்திரனியல் அடையாளஅட்டையை இந்த மாத இறுதியில் பெரும்பாலும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்