துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்களை விடுவிக்க டொலர்களை வழங்கிய மத்திய வங்கி

#Colombo
Prathees
2 years ago
துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்களை விடுவிக்க  டொலர்களை வழங்கிய மத்திய வங்கி

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை விடுவிக்க 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதித்தொகை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படும் எனவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் பொருட்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வர்த்தக அமைச்சு அண்மையில் மத்திய வங்கிக்கு சமர்ப்பித்துள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்