ஈஸ்டர் வழக்கு: மைத்திரியின்  மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 

#Court Order #Maithripala Sirisena
Prathees
2 years ago
ஈஸ்டர் வழக்கு: மைத்திரியின்  மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 

ஈஸ்டர் கலவரத்தில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிக்கா சில்வா நேற்று நிராகரித்தார்.

வழக்கை விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்த மேலதிக மாவட்ட நீதிபதிஇ அனைத்து வழக்குகளையும் மார்ச் 16ஆம் திகதி மீள அழைக்குமாறு உத்தரவிட்டார்.

தாக்குதல் நடந்த நேரத்தில்  முதலாவது பிரதிவாதியாக, மைத்திரிபால சிறிசேன, நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக இருந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளில் இருந்து அவர் தன்னை விடுவிக்க முடியாது எனவும் மனுதாரரின் நிலைப்பாட்டை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும்  மேலதிக  மாவட்ட நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்