80ஆவது பிறந்தநாளை கொண்டாடும் Stephen Hawking - யார் இந்த Hawking?

Prasu
2 years ago
80ஆவது பிறந்தநாளை கொண்டாடும் Stephen Hawking - யார் இந்த Hawking?

ஸ்டீஃபன் ஹாக்கிங்... மன உரத்தின் முன்னுதாரணமாகத் திகழ்ந்த மாமனிதரின் பிறந்தநாள் இன்று.

அதை நினைவுகூர Google Doodle  திரு ஹாக்கிங்கின் வாழ்க்கைக் கதையின் சித்திரக் காணொளியை வெளியிட்டுள்ளது.

அவரைப் பற்றி மேலும் சில தகவல்கள்....

  • பிறப்பு: 8 ஜனவரி 1942
  • மறைவு: 14 மார்ச் 2018 (வயது: 76)
  • பிறந்த நாடு: பிரிட்டன்

படிப்பு:

  • ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம்(முதுகலைப் பட்டம்) [University College, Oxford]
  • டிரினிட்டி ஹால் கேம்பிரிட்ஜ் (முனைவர் பட்டம்) [Trinity Hall, Cambridge]

உடற்குறை

  • திரு ஹாக்கிங்கை 1960களில் amytrophic lateral sclerosis எனும் தீரா நோய் தாக்கியது. அதனால் தசைகள் பலவீனமடைந்தன. அவ்வாறு இருந்தும், அவர் தொடர்ந்து வேலை செய்தார்.

முதன்மை வேலை?

  • தத்துவார்த்த இயற்பியலாளர் (theoretical physicist)

சாதனைகள் சில:

  • Royal Society எனும் இங்கிலாந்து அறிவியல் கழகத்தின் ஆக இளைய ஆய்வாளராகத் (32 வயதில்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • Royal Society-இன் Copley பதக்கம் பெற்றவர் (2006)
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புவியியல் ஈர்ப்புப் பிரிவின் பேராசிரியர்.
  • இங்கிலாந்தின் மதிப்பிற்குரிய Order of British Empire எனும் அறிவியல், கலை சார்ந்த திறன்களைப் பாராட்டும் அமைப்பின் உயரிய விருதைப் பெற்றவர்.

அவர் எழுதிய அறிவியல் சார்ந்த புத்தகங்கள்:

  • The Large Scale Structure of Space-Time
  • Superspace and Supergravity
  • The Very Early Universe
  • A Brief History of Time: From the Big Bang to Black Holes
  • The Universe in a Nutshell
  • A Briefer History of Time
  • The Grand Design

நடக்க முடியவில்லை, கைகளை பெரிய அளவில் அசைக்க முடியாது... அப்படி இருந்தும் அவருக்குத் தொழில் மீதும் அறிவியல் மீதும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

புவியியலில் அளப்பரிய சாதனைகள் புரிந்தார். அதற்காக அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

உலக அளவில், உடற்குறையுள்ளவர்கள் மனந்தளராமல் முன்னேற, ஹாக்கிங் என்றும் ஒரு முன்னாதரணமாகத் திகழ்வார்.

(ஆதாரம்: Encyclopaedia Britannica)

மேலும் இது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்