எரிவாயு லொறிக்குப் பின்னால் ஓடிய பெண் எம்.பி

#Laugfs gas #Litro Gas
Prathees
4 years ago
எரிவாயு லொறிக்குப் பின்னால் ஓடிய பெண் எம்.பி

சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக  எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லொறியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

தன் வீட்டில் எரிவாயு தீர்ந்துவிட்டதாக எரிவாயுவைத் தேடி தெருக்களில் இறங்கியுள்ளார்.

பெலவத்தையில் உள்ள விநியோக நிலையம் ஒன்றில் எரிவாயு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, தாங்கள் அங்கு சென்றதாகவும் அவர்கள் செல்வதற்குள் எரிவாயு தீர்ந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  அத்துருகிரியவில் எரிவாயு சிலிண்டர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தான் அத்துருகிரியவிற்கு சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தான் அதுருகிரியவுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​எரிவாயு லொறி ஒன்றைக் கண்டதாகவும், அதனைப் பின்தொடர்ந்து சென்றதாகவும் அவர் கூறினார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4