பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பாக வெளியான தகவல் 

#Student
Prathees
4 years ago
பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பாக வெளியான தகவல் 

45 லட்சம்  பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர்களை வழங்கியது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் வவுச்சர்களை ஒழித்து சீருடை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிடம் இருந்த போதிலும், அந்த அமைச்சுக்குள் சீருடை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,  ​​பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நிறைவடைய உள்ளதாகவும் இதற்கு முன்னர் சீருடை விநியோகம் தொடர்பில் முறையான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4