ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது, அடுத்தது பொதுத்தேர்தல் என்கின்றார் மைத்திரி

Prabha Praneetha
4 years ago
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது, அடுத்தது பொதுத்தேர்தல் என்கின்றார் மைத்திரி

சமூக முற்போக்கு, நேர்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டணியாக எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு தனிநபராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது என தெரிவித்த அவர், மாகாணசபைத் தேர்தல்கள் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலாகவே அமையும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4