இலங்கைக்கு  127 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கிய சீனா

#China
Prathees
2 years ago
இலங்கைக்கு  127 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கிய சீனா

சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 127 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைய இந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவ உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் இன்று  இடம்பெற்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹோன் இந்த வைத்திய உபகரணங்களை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்