பஸ்ஸின் அடியில் விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

#Death #Police
Prathees
4 years ago
பஸ்ஸின் அடியில் விழுந்து   இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

நாவலப்பிட்டி பஸ் நிலையத்தை கடந்து சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கினிகத்தேன பெரகஹமுல பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.தயாவதி (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் பணிக்காக சென்று விட்டு பஸ் நிலையத்திற்கு வீடு திரும்பும் வழியில் பஸ் நிலையத்தினூடாகச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் பின் சக்கரத்தில் விழுந்ததில் காயமடைந்த பெண் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதியை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4