தனியார் விமான நிறுவனத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் கைது

#Arrest
Prathees
4 years ago
தனியார் விமான நிறுவனத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் கைது

சகுராய் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அதன் பிரதம பொறியியலாளர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பனிக்கு சொந்தமான இலகுரக விமானமொன்று கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் திடீரென தரையிறக்கப்பட்டமையினால்  இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் விபத்தில் காயமடைந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து சகுராய் விமான சேவையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4