மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் கம்மன்பில பதில்

Prasu
4 years ago
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் கம்மன்பில பதில்


அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபன வசம் இருக்கின்றது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஜனவரியில் நுகரப்படும் எரிபொருளுக்கு நாட்டுக்கு 350 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது.

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும்.

அதன்படி, இம்மாத எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 200 மில்லியன் டொலரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருக்கின்றது. அமைச்சரவையால் பணம் வழங்கப்படும் என நம்புகின்றோம்" - என்றார்.
 
இதேவேளை, ஜனவரி நடுப்பகுதிக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனச் சில தினங்களுக்கு முன்னர் வானொலி நிலையம் ஒன்றில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4