பிரான்ஸ் செல்ல முற்பட்ட வெளிநாட்டவரால் விமானநிலையத்தில் பரபரப்பு

Prathees
4 years ago
பிரான்ஸ் செல்ல முற்பட்ட வெளிநாட்டவரால் விமானநிலையத்தில் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான வெளிநாட்டவர் ஒருவர் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி சென்றவேளை கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீள கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் நோக்கிப் பயணிக்க முயற்சித்தபோது குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது  தப்பி சென்ற குறித்த வெளிநாட்டவர்,வெளியேறும் பகுதியில் உள்ள கூரைமீது ஏறி மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அழைக்கப்பட்டு, சுமார் ஒரு மணிநேர தேடுதலின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவரின் கழுத்துப் பகுதியில் 4693 என்ற இலக்கம் பச்சை குத்தப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4