ஒரு டொலர் கூட கொடுக்கப்படவில்லை - துறைமுகத்தில் சிக்கியிருக்கும் கொள்கலன்கள்

Prathees
4 years ago
ஒரு டொலர் கூட கொடுக்கப்படவில்லை -  துறைமுகத்தில் சிக்கியிருக்கும் கொள்கலன்கள்

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக உறுதியளித்த போதிலும் நேற்று (10ஆம் திகதி) வரை ஒரு டொலர் கூட வழங்கப்படவில்லை என அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொள்கலன்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள் தங்களால் இயன்ற வழிகளில் இரண்டு கொள்கலன்களையும் விடுவிப்பதாகவும் அவர் கூறினார்.

‘‘டொலர் பிரச்சினை தீவிரமானது. வாக்குறுதியளித்தபடி டொலர்கள் வழங்கப்படுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், ”என்று செனவிரத்ன கூறினார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4