இலங்கை தனியார்த்துறை ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுமா?

#SriLanka
Nila
4 years ago
இலங்கை தனியார்த்துறை ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுமா?

நாட்டின் பொருளாதார நிலைமை சீராகும் வரையில் தனியார்த்துறை ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினமென தனியார்த்துறை பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சி சில்வா மற்றும் தனியார்த்துறை பிரதானிகள் ஆகியோருக்கிடையில் தொழில் திணைக்களத்தில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே தனியார்த்துறை பிரதானிகள் தொழில் அமைச்சரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வரி அதிகரிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப்பொருள் இறக்குமதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4