கேரளா கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள் இருவர் கைது!

Prabha Praneetha
4 years ago
கேரளா கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள் இருவர் கைது!

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று  இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மகேந்திரா ரக வாகனத்தில் கஞ்சாவினை கடத்தி சென்ற போது பூவே சோதனைச்சாவடியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸார் வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்களை 22 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்த 22, 39 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4