உயர்கல்வி கற்க ரஞ்சனுக்கு அனுமதி

#Ranjan Ramanayake
Prathees
4 years ago
உயர்கல்வி கற்க ரஞ்சனுக்கு அனுமதி

சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்து உயர்கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நாவலயிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரவும், சூம் மூலம் விரிவுரைகளில் கலந்து கொள்ளவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன், நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி, நீதித்துறையை அவமதித்ததாக  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மகல்கந்தே சுநந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர் சுனில் பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4