180 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த.. கடல் ட்ராகனின் புதைப்படிமம் கண்டுபிடிப்பு..!!

Keerthi
2 years ago
180 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த.. கடல் ட்ராகனின் புதைப்படிமம் கண்டுபிடிப்பு..!!

இங்கிலாந்தில் சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கடல் டிராகனின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் இருக்கும் நார்த் லிசென்ஸ்டர்ஷுரே என்னும் பகுதியில் இருக்கும் ரூத்லேண்ட் என்ற இடத்தில், உள்ள ஒரு தீவின் ஏரியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஜோ டேவிஸ் என்னும் ஆய்வாளர் வித்தியாசமான வடிவில் இருக்கும் புதைபடிவம், மண்ணில் புதைந்திருப்பதை கண்டறிந்தார்.

அதன்பிறகு, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது வித்தியாசமான உயிரினம் ஒன்றின் புதைப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, ஜோ டேவிஸ் தொல்லியல் துறையினருடன் சேர்ந்து, ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த ஆய்வின் படி அது கடல் டிராகனின் புதைப்படிமம் என்று தெரியவந்திருக்கிறது.

இன்ஞ்ச்யோசரஸ் எனப்படும் அந்த கடல் டிராகன், சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கிறது. தற்போது கண்டறியப்பட்டிருக்கும் அதன் புதைப்படிவம் சுமார் 10 மீட்டர் நீளம் உடையதாக இருக்கிறது. இதன் எடை சுமார் ஒரு டன் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது, அந்த புதைப்படிமத்தை, வைத்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்