சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரம்

#China
Prathees
4 years ago
சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரம்

எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் பருவத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சீன உர கையிருப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னர் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலில் இருந்து உரம் எடுக்கப்பட மாட்டாது என்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4