மோதலில் ஒருவர் பலி: சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

#Police
Prathees
4 years ago
மோதலில் ஒருவர் பலி: சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) இடம்பெற்ற மோதலில்  தவறி விழுந்ததால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கிரிமடுவ - கீழ்ப்பிரிவு - நிவிதிகல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் சில காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும்இ அவர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4