அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்!

#SriLanka
Nila
4 years ago
அதிரடி அறிவிப்பை  வெளியிட்ட நிதியமைச்சர்!

“அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன.”

இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது.

கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு ஈடுபட்டுள்ளது.

அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை, அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள் நன்கறிவார்கள்” – என்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4