விமானி அறைக்குள் நுழைந்து கட்டுப்பாட்டு கருவிகளை உடைத்த பயணி

Prasu
4 years ago
விமானி அறைக்குள் நுழைந்து கட்டுப்பாட்டு கருவிகளை உடைத்த பயணி

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் (Cockpit) புகுந்து, கன்ட்ரோல் கருவிகளை கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தினார்.

விமானி தடுக்க முயன்றும், பலன் அளிக்கவில்லை. கன்ட்ரோல் கருவிகளை சேதப்படுத்திய நிலையில், காக்பிட் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றார். ஒரு வழியாக விமான பணியாளர்கள் அவரை பிடித்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த பயணி ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4