கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் இயங்கும்!

#SriLanka #School #NuwaraEliya #kandy #Lanka4 #Reopen #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
59 minutes ago
கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் இயங்கும்!

சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மழை மற்றும் பாதகமான வானிலை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய வானிலை நிலைமையை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, நாளை முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4