காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிப்பு

#Police
Prathees
4 years ago
காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிப்பு

மஹரகம பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பற்றிய விவரங்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்ட நிலையயில், இது பற்றி அறிந்ததும் சிறுமி தனது  அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சந்திக்க வந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற உள்ளனர்.

மஹரகம நாவின்ன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

காணாமல் போன சிறுமி தொடர்பில் எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் குறித்த சிறுமியை ஊடகங்கள் ஊடாக வெளியிட பொலிஸார் தீர்மானித்திருந்தனர்.

அதன் பிரகாரம்இ அவர் குறித்த தகவலை பொலிஸார் நேற்று ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4