தேவையான மருந்து வகைகள் தொடர்பில் அறிக்கை கோரல்...

Prabha Praneetha
2 years ago
தேவையான மருந்து வகைகள் தொடர்பில் அறிக்கை கோரல்...

எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நாட்டுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

3 மாத கால அடிப்படையில் 2 காலண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சர்வதேச ரீதியில் எத்தகைய தடைகள் ஏற்பட்ட போதிலும் பொது மக்களுக்கு தேவையான மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் மருந்து இறக்குமதி செய்யப்படும் நாடுகள் மருந்து வகை தொடர்பான தகவல்கள் மற்றும் தயாரிக்கப்படும் மருந்துகள் குறித்த தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்கடர் சமன் ரத்நாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

மருந்து இறக்குமதியின் போது நாட்டில் தயாரிக்க கூடிய மருந்துகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் சில மருந்து வகைகள் பாரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு வர்த்தக குறியீட்டின் கீழ் வழங்கப்படும் மருந்து வகைகளுக்கு மக்கள் பழக்கப்பட்டிருப்பதானால் அவ்வாறான மருந்து வகைகள் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

நாட்டில் எந்த வகையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது இருப்பதற்கு ஒவ்வொரு வருட ஆரம்பத்திற்கு முன்னர் அது தொடர்பில் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொண்டு செயற்படுத்துவது முக்கியமான விடயமாகும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இதேவேளை, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இலங்கை தற்பொழுது சர்வதேச பாராட்டை பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

51 ஆயிரம் மில்லியன் தடுப்பூசி மருந்தை நாட்டுக்கு கொண்டு வர முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்றும் அமைச்சர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்