நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம்?

Prabha Praneetha
2 years ago
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம்?

உள்நாட்டு இறைவரி, மதுவரி மற்றும் சுங்கத் திணைக்களங்களினால் நிர்வகிக்கப்படும் வரிகளை நிதியமைச்சின் விசேட பிரிவின் கீழ் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போதைய அரசாங்கத்தின் தவறான வரிக் கொள்கைகளால் 2020ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு 60,000 கோடி ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இதனால் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு அரசாங்கத்தின் வருவாய் வீழ்ச்சியே காரணம் என்றும், இதற்கு பொது நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்