தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் அபாயம்

Prathees
2 years ago
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் அபாயம்

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், 

தேங்காயின் வருடாந்த அறுவடை 3 பில்லியன் தேங்காய்கள் மற்றும் நாட்டில் தேங்காய் தேவை 4.9 பில்லியன் ஆகும். வீட்டு உபயோகத்திற்காக  1.8 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படுகின்றன. அதேபோல் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு 1.8 பில்லியன்  தேங்காய்கள் தேவைப்படுகின்றன.

ஏற்றுமதிக்குத் தேவையான தேங்காய்களின் எண்ணிக்கை 1.3 பில்லியன். வருடாந்த தேங்காய் அறுவடையுடன் ஒப்பிடுகையில், நாட்டில் மொத்த தேங்காய் பற்றாக்குறை 1.9 பில்லியனாக உள்ளது.

1.9 பில்லியன் தேங்காய் தட்டுப்பாட்டை அரசாங்கம் சரியாக நிர்வகிக்காவிட்டால், உள்ளூர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

இந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்ததுஇ இதுபற்றி அரசுக்கு முன்பே தெரிவித்திருந்தோம். ஆனால் அப்போது அரசு எடுத்த முட்டாள்தனமான முடிவுகளால் உள்ளூர் நுகர்வோர் தேங்காய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும் அரசாங்கம் இந்த நிலைமையை சரியான முறையில் கையாளும் பட்சத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாவனையாளர்களுக்கு நீதி வழங்குவதுடன் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்