மட்டக்களப்பு  விமான நிலையம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

#Batticaloa
Prathees
2 years ago
மட்டக்களப்பு  விமான நிலையம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தில் முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம், இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தற்போது இந்த ஒப்பந்தத்தை உருவாக்கி வருகிறது.

ஓடுபாதையின் வடக்குப் பகுதியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு வசதிகளை அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலைய வளாகத்தினுள் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிகள், சுற்றுலாத்துறையின் செயற்பாட்டாளர்களுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை மேம்படுத்தும் விசேட செயற்திட்டமொன்றை ஏற்கனவே முன்னெடுத்துள்ளன.

இதற்கிடையில், கொவிட் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கொழும்பு விமானத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் என நம்பப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்