70 இலட்சம் பேருக்கு ஒமைக்ரான் பரவும்!- WHO

Prabha Praneetha
3 years ago
70 இலட்சம் பேருக்கு ஒமைக்ரான் பரவும்!- WHO

ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தில் உள்ள மக்கள் தொகையில் அரைவாசி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவிக்கையில், ´டெல்டா வகை வைரஸ் பரவலை விட ஒமைக்ரான் வேகமாக ஐரோப்பாவில் பரவுகிறது.

அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் ஐரோப்பாவில் மக்கள் தொகையில் பாதி பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதின் அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா வகை வைரசால் பாதிப்படைந்தன. தற்போது அதைவிட ஒமைக்ரான் பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது´ என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!