சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல அமைச்சர்:பாதுகாப்பிற்காக 74 STF உட்பட 84 அதிகாரிகள்
அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தனது சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தி 74 விசேட அதிரடிப்படையினர் உட்பட 81 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பிற்காக ஏழு அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ள போதிலும், குறித்த அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 81 பொலிஸாரை நியமித்து விதிகளை மீறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்ற போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர் தனது சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தி தனது பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படை பணியாளர்களை ஈடுபடுத்துவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடந்த காலங்களில் தமது கடமைகளுக்குப் புறம்பாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.