கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன்

Reha
3 years ago
கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன்

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பிரதான வீதி கிரானைச் சேர்ந்த ஜீ. சுஜானந்தன் (வயது -16) என்பவரும், பாடசாலை வீதி கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் (வயது - 16) என்பவருமே கடல் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர்.

இன்று தைப்பொங்கல் தினமானதால் கிரான் தேசிய பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 07 மாணவர்கள் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர்.

இன்று வழமைக்கு மாறாக கடலின் அலை உயர்வாக இருந்ததால் இருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

கடலில் காணாமல் போனவரைத் தேடும் பணியில் கடற்படையினர், கல்குடா சுழியோடிகள், மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!