இயற்கை விவசாயம் தோல்வி என ஊடகங்களுக்குச் சொன்னால் 300,000 ரூபா!

Prathees
4 years ago
இயற்கை விவசாயம் தோல்வி என ஊடகங்களுக்குச் சொன்னால் 300,000 ரூபா!

இயற்கை விவசாயம் தோல்வியடைந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக சிலர் 300,000 ரூபாவை செலுத்த தயாராக இருப்பதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் தெரிவித்தனர்.

அரசாங்க கொள்கைக்கு அமைவாக இயற்கை நெல் செய்கையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு தாக்கங்களும் சதிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விவசாய அமைச்சில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்த போதே விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4