இலங்கை அணிக்கான இமாலய இலக்கை நிர்ணயித்தது சிம்பாபே அணி

Prasu
4 years ago
இலங்கை அணிக்கான இமாலய இலக்கை நிர்ணயித்தது சிம்பாபே அணி

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை குவித்துள்ளது.

போட்டியில் அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சீன் கொலின் வில்லியம்ஸ் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல் ரெஜிஸ் சகப்வா 81 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன10 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நுவான் பிரதீப் மற்றும் ஜெப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான சாமிக குணசேகர, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு ஓவரை மட்டும் வீசி மைதானத்தில் இருந்து வௌியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, இலங்கை அணிக்கு 297 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டுச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4