ஒரு கோடி டொலர் இலாபம் ஈட்டிய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்

Prabha Praneetha
4 years ago
ஒரு கோடி டொலர் இலாபம் ஈட்டிய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்

கோவிட்  தொற்று நோயின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 10 மில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளது.

விமானப் பொருள் போக்குவரத்து, விமான நிலையத்தின் நடவடிக்கைகளை கையாண்டதன் மூலம் இந்த இலாபம் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜனத விஜயபத்திரத்ன தெரிவித்துள்ளார்.

விமான சேவையின் பயணிகள் போக்குவரத்து பிரிவு நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுவனத்தில் இலாபத்தை ஈட்டிய ஒரே பிரிவு இது எனவும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் தொற்று நிலைமை காரணமாக பயணிகள் போக்குவரத்து சீர்குலைந்தாலும் பொருட்கள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் அதிகளவில் நடந்துள்ளது எனவும் விஜயபத்திரன குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4