சு.க. உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட 'மொட்டு' கட்சியினர் முயற்சி! - மைத்திரி குற்றச்சாட்டு

#SriLanka #Maithripala Sirisena
Reha
4 years ago
சு.க. உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட 'மொட்டு' கட்சியினர் முயற்சி! - மைத்திரி குற்றச்சாட்டு

"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு 'மொட்டு' கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும், உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம். - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமடைந்து வருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், எமது வாய்களுக்குப் பூட்டுபோட்டு, சாவியை 'மொட்டு' கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

உண்மையை வெளிப்படையாகக் கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டுவோம்" - என்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4