நீண்ட விடுமுறை: அதிக வருமானத்தை ஈட்டிய நிறுவனங்கள்

Prathees
4 years ago
நீண்ட விடுமுறை: அதிக வருமானத்தை ஈட்டிய நிறுவனங்கள்

நீண்ட வார விடுமுறை காரணமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் தேசிய மிருகக்காட்சிசாலைக்கு சொந்தமான நிறுவனங்கள் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளதாக விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ரிதியகம சபாரி பூங்கா கடந்த இரண்டு நாட்களில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதனைவிட மேலதிகமாக தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் கடந்த மூன்று நாட்களில் 3.4 மில்லியன்  ருபாய் வருமானமும்  பின்னவல யானைகள் சரணாலயத்தின் மூலம் 2.6 மில்லியன் ருபாய் வருமானமும்  கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த இடங்களுக்கு அதிகளவிலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4