பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி- ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

Prasu
4 years ago
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி- ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 33 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. சில நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் அறிமுகம் செய்துள்ளன.

இந்நிலையில் அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அதுமட்டும் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களாக கருத்தப்படுவர். அவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி உண்டு.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4