மகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்! தொடரும் அவலம்

#SriLanka
Nila
4 years ago
மகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்! தொடரும் அவலம்

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார்.

வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாயி வயது 78 என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4