இலங்கையில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துக்கள்!

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துக்கள்!

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகனம் திருத்தும் இடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்து இன்று மதியம் ஏற்பட்டதாக கண்டி தீயணைப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

வாகனம் திருத்தும் இடத்திலிருந்த வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மின்சார கசிவே, தீ பரவியமைக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் பொரளையிலுள்ள ஐந்து வீடுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் நேற்றுமுன்தினம் வவுனியாவிலுள்ள மதுபானசாலைகளிலும் தீ பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4